2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நாச்சியாதீவுக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.சபூர்தீன்)

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக அநுராதபுரம், நாச்சியாதீவுக்குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தை எட்டியுள்ளது. குளத்தை அண்மித்துள்ள மரதன்கடவல திறப்பணை மற்றும் தெமட்டாவ குளங்களின் மேலதிக நீர் நாச்சியாதீவுக்குளத்துக்கு வந்து சேர்வதால் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக 8 வாய்க்கால்கள் தோண்டப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் காரணமாக நாச்சியாதீவு பிரதேசத்திலுள்ள 600 குடும்பங்கள் இடம்பெயர்ந்து நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இதுவரையில் எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சற்றுநேரத்துக்கு முன்னர் இதோகம பொலிஸார் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .