2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆண்டிமுனை தமிழ் மஹாவித்தியாலய பொன்விழா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் தெற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மஹாவித்தியாலயத்தின் பொன்விழாக் கொண்டாட்டம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜயசிங்கவும் சிறப்பு அதிதிகளாக கல்விப் பணிமனை அதிகாரிகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, பொன்விழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை மாணவர்களின் விஞ்ஞான மற்றும் ஓவியம் உட்பட பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்கிய கண்காட்சியும் ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலயத்தில நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .