2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

பாலாவிப் பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் பாலாவிப் பிரதேசத்தில் கஞ்சாவுடன் பயணித்த ஒருவர் நேற்று சனிக்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதாகவும்  கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 500 கிராம் எடை கொண்ட மூன்று கஞ்சா பொதிகள் பொலிஸாக்ரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவரின் தரகரெனத் தெரிவித்த பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .