2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு சகல அமைச்சுகளுக்கும் விடுமுறை விடுதிகள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                       
அநுராதபுரம் மாவட்டத்தில் ஒயாமடுவ பிரதேசத்தில் எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அரசாங்கத்தின் சகல அமைச்சுக்களுக்கும் விடுமுறை விடுதிகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்கா தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி முடிவடைந்த பின்னர் இந்த விடுமுறை இல்லங்கள் அந்த அமைச்சுக்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த அமைச்சுக்கே வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு அமைவாக நடைபெறவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டம் சிறப்பாக நடைபெற இந்த விடுமுறை இல்லங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X