2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாம்பாட்டியின் பாம்பு தீண்டியதால் நெதர்லாந்து பிரஜை வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாரவில கடலோரத்தில் பாம்பாட்டி ஒருவரின் பாம்புடன் விளையாடிய நெதர்லாந்துப் பிரஜை ஒருவர் அப்பாம்பு தீண்டியதால் சிலாபம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய மாரியுன் ஸ்பேன் என்பவரே பாம்புக் கடிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

உல்லாசப் பயணம் மேற்கொண்டு கடந்த 18ம் திகதி நண்பர்களுடன் இலங்கைக்கு வந்துள்ள இவர், நேற்று நண்பர்களுடன் மாரவில கடற்கரையோரமாக உலாவிக் கொண்டிருந்த வேளை அங்கு மாம்பாட்டி ஒருவர் பாம்பு ஆட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு அவ்விடத்திற்குச் சென்றுள்ளார்.

அவ்விடத்தில் நெதர்லாந்து பிரஜை பாம்பாட்டியின் விஷப் பாம்பு ஒன்றுடன் விளையாட முற்பட்ட போது அப்பாம்பு அவரைத் தீண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாம்புக் கடிக்குள்ளான வெளிநாட்டுப் பிரஜை உடனடியாக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0

  • IBNU ABOO Thursday, 22 September 2011 01:31 AM

    பாலை ஊட்டி பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மை கடிக்கதானே அது வரும் என்பது தெரியாததால் வந்த பரிதாபம். விளையாட்டு வினையாயிற்றே. இப்பாம்பு நம்ம அரசியல்வாதிகளுக்கு கடித்து இருந்தால் அந்த இடத்திலேயே பாம்பு செத்திருக்கும்.

    Reply : 0       0

    lankan Thursday, 22 September 2011 04:54 AM

    சரியாய் சொன்னீங்க மச்சான்.

    Reply : 0       0

    xlntgsonn Thursday, 22 September 2011 09:51 PM

    பாம்பு கடிக்காது, கொத்தும் என்றாலும் வழக்கில் இருக்கிறது கடிக்கும் என்று, பாம்புக்கு மேலும் கீழும் பற்கள் இருக்கின்றனவா, கடிக்க?
    மூட நம்பிக்கை என்று கூறி விட்டு பழங்குடிகள் போல் பாம்பை திரும்பிக் 'கடித்தால்' சுகமாகிவிடும் என்கிறார்கள், இப்போது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X