2021 ஜூன் 17, வியாழக்கிழமை

உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல் கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
மாணவர்களுக்கான உயர் கல்வி தொடர்பான வழிகாட்டலும், அது தொடர்பான கண்காட்சியும் இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வில், ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் நாயகம் மஹ்ருப் மரைக்கார் கலந்து கொண்டார்.
இக் கண்காட்சியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்வேறு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அவற்றின் உயர் கல்வி தொடர்பான விளக்கங்களினையும், உயர் கல்விக்கான வழி காட்டல்களினையும் வழங்குகின்றன.

இதற்கான ஒழுங்குகளினை ஒபேட் நிறுவனத்தின் இளைஞர் அமைப்பும், பி.டி.பி. சர்வதேச நிறுவனமும் மேற்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .