2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி, இருவர் காயம்

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ஆகில் அஹமட்)

   
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளஞ்சிய பகுதியில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற இடி மின்னல் தாக்குதல் சம்பவத்தில்  51 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.  

சேனையொன்றில் வேலை செய்துகொண்டிருந்த இவர்கள் மூவரும் கடுமையான மழைபெய்ததன் காரணமாக மழை சற்று ஓயும் வரை காத்திருந்த  போதே இடி மின்னல் தாக்கத்துக்குட்பட்டு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன் ஒருவர் மரணமடைந்துள்ளார். காயமடைந்த இருவரில் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர் கப்பரிக்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X