Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சொந்தமான பணத்தை வங்கியில் வைப்பிலிடக் கொண்டு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இருவர் அதனைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று புத்தளம் பிரதேசத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது 47 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் அதில் 17 இலட்சம் ரூபா மாத்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வங்கி வாயிலில் சைக்கிளை நிறுத்திவிட்டு பணப் பையையும் எடுத்துக்கொண்டு வங்கிக்குள் செல்ல முற்பட்ட போது, அங்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஆயுததாரிகள் இருவர் மேற்படி நபரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு பணப் பைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025