Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
பொல்பித்திகமவிலுள்ள பௌத்த விகாரையொன்றின் விகாராதிபதியிடமிருந்து புராதனப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட் ஒருவருக்கு மாஹோ நீதவான் நீதிமன்றம் 2 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பி.ஏ. புஷ்பகுமார ஜயவர்தன எனும் இந்த இராணுவ லெப்டினன்டுக்கு 200,000 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இதே போன்ற குற்றச்சாட்டுகளில் இவர் குற்றவாளியாக காணப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் தொடர்புபட்ட வர்த்தகர் ஆர்.எம். தனஞ்ஜய என்பவருக்கும் ஆர்.ஜி.சுமித் ஜயசோம என்பவருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இருவருடகால கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், வர்த்தகர் தனஞ்ஜயவுக்கு 200,000 ரூபா அபராதமும் சுமித் ஜயசோமவுக்கு 250,000 ரூபா அபராதமும் விதித்து மாஹோ மேலதிக நீதவான் பாரதி விஜேரட்ன தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025