2025 மே 26, திங்கட்கிழமை

அனுமதி பத்திரமின்றி ஆடுகளை ஏற்றி சென்ற இருவர் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அனுமதி பத்திரமின்றி மிருகங்களை வதைப்படுத்தும் வகையிலும் சிறிய ட்ரக் வண்டியொன்றில் 56 ஆடுகளை ஏற்றி சென்ற இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் நிலைய அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகலலொன்றின் அடிப்படையில் அநுராதபுரம் கல்பொத்தேகம பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 56 ஆடுகளில் 16 ஆண் ஆடுகள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது ஆரம்ப கட்ட விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அநுராதபரம் தலைமையக பொலிஸ் நிலைய போக்கவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்கவின் ஆலோசனைப்படி இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X