Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளத்தில் பேரீச்சம்பழமரம் நடுகை உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை முன்னெடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சரிடம்¸ புத்தளம் நகர வரியிறுப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சருக்கு புத்தளம் நகர வரியிறுப்பாளர் சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்தது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புத்தளத்தில் ஏற்கெனவே நாட்டப்பட்ட பேரீச்சம்பழ மரங்கள் வளர்ந்து காய்த்து பழங்களும் தற்போது பழுத்துக் காணப்படுகின்றன. புத்தளத்தில் பேரீச்சம்பழ மரங்கள் வளர்வதற்கான காலநிலையும் காணப்படுகின்றன. இருப்பினும் பேரீச்சம்பழ உற்பத்தி தொடர்பான தெளிவு பொதுமக்களுக்கோ விவசாயத்துறை நிறுவனங்களுக்கோ போதியளவில் இல்லாதுள்ளது.
எனவே, புத்தளத்தில் பேரீச்சம்பழமர உற்பத்தியாளர்களை இனங்கண்டு பேரீச்சம்பழ மரங்களின் உற்பத்தி தொடர்பான பயிற்சியை வழங்குவதன் மூலம் புத்தளத்தில் பேரீச்சம்பழமர உற்பத்தியை அதிகரிக்க முடியும். மட்டக்களப்பு பிரதேசங்களுக்கு புத்தளம் பிரதேசங்களிலிருந்தே பேரீச்சம்பழ மரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025