2025 மே 26, திங்கட்கிழமை

விகாராதிபதியை கட்டிவைத்து விட்டு புதையல் தோண்டிய குழுவினர்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலவெவ புராதன விகாரையின் விகாராதிபதியை மரமொன்றில் கட்டி வைத்துவிட்டு புதையல் தோண்டிய சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றது.

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவினர்,  புதையலை தோண்டி எடுக்கும் முன்னர் பொழுது புலர்ந்ததால் புதையல் எதனையும் எடுக்க முடியாத  நிலையில்  கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இன்று காலை விகாரைக்குச் சென்ற கிராமவாசிகள், மரத்தில் கட்டப்பட்டிருந்த விகாராதிபதியின் கட்டை அவிழ்த்து விட்டதுடன், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை கண்டுபிடிக்கும் முகமாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 01 November 2011 10:01 PM

    மரத்தில் கட்டி வைப்பதில் குரு களனி மே.....சில் ....வா..... ? குருவை மிஞ்சிவிட்டனரோ, விகாராதிபதியை அல்லவா கட்டிவைத்துள்ளனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X