Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
நாட்டிலுள்ள சகல கமநல சேவைகள் மத்திய நிலையங்களிலும் பழவகை மற்றும் மரக்கறி வகைகளைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாத அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்க பின்வாங்கப் போவதில்லை என கமநல சேவைகள் மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் 555 கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் உள்ளதோடு அதிகமான நிலையங்களில் காடுகள் வளர்ந்து காணப்படுகிறது. விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு ஆலோசனை வழங்கும் கமநல சேவைகள் நிலையங்களில் காடுகள் வளர்ந்து காணப்படுவது பாரதூரமான குற்றமாகும். எனவே சகல கமநல சேவை நிலையங்களும் முன்மாதிரி நிலையங்களாக அமைய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025