2025 மே 26, திங்கட்கிழமை

வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு அபராதம்

Super User   / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றினை வைத்திருந்த நபர் ஒருவருக்கு 20,000 ரூபா அபராதம் விதித்து அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான தர்ஷி;கா விமலசிரி தீர்ப்பளித்தார்.

கோரகஹவௌ, பண்டுலகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி சந்தேகநபரிடம் இருந்த போது அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பல் முறைப்பாட்டு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த துப்பாக்கியினை அரச உடமையாக்கமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X