Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 07 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் கல்லூரி அமைந்துள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கர்ப்பிணிப்பெண்ணொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
சிலாபம் பகுதியிலிருந்து கஹட்டகஸ்திகிலிய நகர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வான் அநுராதபுரம் ஜயந்தி மாவத்தைப் பகுதியில் (ஸ்வர்ணபாலி மகளிர் கல்லூரியின் முன்னால்) வீதியை விட்டு விலகிச்சென்று புதிதாக கட்டப்பட்ட வாய்க்காலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.
வானில் பயணித்த கர்ப்பிணிப்பெண்ணொருவரும் மற்றும் ஆண்கள் இருவருமே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025