2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொத்தான்தீவு -வட்டவான வீதி புனரமைப்பு பணிகள் துரிதம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு –வட்டவான வீதி செப்பனிடப்பட்டு தார் வீதியாக மாற்றும் நடவடிக்கை விரைவாக நடைப்பெற்று வருகின்றது.

வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் இவ்வீதி புனரமைப்புக்கென இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

வீதி புனரமைப்பு செய்யப்படுவதினால் கொத்தான்தீவு, கட்டைக்காடு, வட்டவான பகுதி மக்கள் நன்மையடையவுள்ளனர். இவ்வீதி அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X