Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
மழை பெய்ய ஆரம்பித்ததும் அநுராதபுர மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலும் நீர் தேங்கிநிற்க ஆரம்பித்துள்ளதால் நுளம்புகளின் தொல்லை பலமடங்கு அதிகரித்து நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் விஜேதாச அதபத்து தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக அநுராதபுர மாவட்டமெங்கும் மழை பெய்துவருவதுடன் குட்டைகளிலும் பொது மக்களால் சூழலில் போடப்படும் உக்காத பொருட்களின் மூலமும் நுளம்புகள் பெருகும் வீதம் அதிகரித்துள்ளது.
இதனால் டெங்கு நோய் பரவும் அபாயமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. மழையின் பின் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஹொரவபொத்தான, மதவாச்சி, கெப்பிட்டிகொள்ளாவ, கஹட்டகஸ்திகிலிய, அநுராதபுரம் மேற்கு, கலன்பிந்துனுவௌ, விலச்சிய, நொச்சியாகம, றம்பாவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறுவதுடன் தத்தமது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தாமும் பாதுகாப்புப்பெற்று மற்றயவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டால் உடன் வைத்தியரை நாடி முறையான சிகிச்சையினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago