2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக கஞ்சா, மதுபானம் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

பதவிய கிரேவல்கந்த பகுதியில் சட்டவிரோதமாக ஒருதொகை மதுபான போத்தல்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனைக்காக வைத்திருந்த நபரை பதவிய பொலிஸார் நேற்று செவ்வாயக்கிழமை; கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 750 கிராம் கஞ்சா, 8 மதுபான போத்தல்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது 35 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X