Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பலவந்தமாக முத்தமிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பஸ் வண்டியின் நடத்துனரை இம்மாதம் 13ஆ திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ மாவட்ட நீதவான் ஹர்ஷ டி சில்வா உத்தரவிட்டார்.
கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி குறித்த மாணவி பாடசாலை விட்டு வீடு நோக்கி கெக்கிராவயிலிருந்து கல்நேவ நோக்கிச் செல்லும் பஸ் வண்டியில் பயணித்துள்ளார். குறித்த பஸ், கல்நேவ பகுதியை அண்மித்த வேளையில் பஸ் வண்டியில் குறித்த மாணவியைத் தவிர வேறு பயணிகள் எவரும் இருந்திருக்கவில்லை.
இத்தருணம் பார்த்த நடத்துனர் மாணவியை இவ்வாறு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததை அடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
anilar Thursday, 08 December 2011 11:01 PM
இப்படியான காமப் பசியுடைய மிருகங்களுக்கு என்ன தண்டனை என்பதை இஸ்லாம் அன்றே சொல்லிவிட்டது. கடுமையான தண்டனை மூலமே இதை இல்லாமல் செய்யலாம்.
Reply : 0 0
naren Friday, 09 December 2011 01:59 AM
சவுதிக்கு அனுப்பி விடுங்க.
Reply : 0 0
anilar Friday, 09 December 2011 06:02 AM
திரு. நரேன் அவர்களே உங்கட குடும்பத்தில ஒரு பிள்ளைக்கு நடந்தா குற்றம் செஞ்சவன சவூதிக்கா அனுப்புவிங்க... சொல்லுங்க...
Reply : 0 0
fath Friday, 09 December 2011 05:18 PM
இப்படியானவர்களை தொழிலில் இருந்தும் விரட்ட வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago