2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் கல்வித்திணைக்கள தமிழ் மொழிப் பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.அனீஸ், புத்தளம் கல்விப் பணிமணையின் பாட இணைப்பாளர்களான வீ.அருனாகரன், ஏ.எம்.ஜூனைட், முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலீக், புத்தளம் போக்குவரத்துப் பொலிஸ் அஜீத் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் விடுமுறையின்றி சகல நாட்களும் பாடசாலைக்கு சமூகமளித்த ஆசிரியர்கள், மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவத் தலைவர்கள், விஷேட தேவையுடைய மாணவர்களில்  சிறந்த மாணவர்கள், புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்;வுகள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X