2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வர்த்தகர்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட அறுவர் பொலிஸாரல் கைது

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

கலன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் வாய்க்கால் பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் அபகரித்துச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக கலன்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பேக்கரியில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களை விற்பனைக்காக வாகனமொன்றில் எடுத்துச் சென்றபோதே வாகன சாரதி உள்ளிட்ட விற்பனைப் பிரதிநிதிகள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தி வாகனத்துக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் 25 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் மற்றும் பணத்தை இவர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X