Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 01 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளபற்றாக்குறை தொடர்பாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவிடம் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலை அதிபர் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இப்பாடசாலைக்கான உதவிகளை தன்னால் முடிந்தவரை செய்து கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
மேற்படி பாடசாலையில் 34வது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கல்விக் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்க பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்ட பின்னர் இக்கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.
பாடசாலை அதிபர் எஸ்எம்.ஹூதைலீனின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லால் பெர்ணந்து (ஐ.தே.க), முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் டி.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
26 minute ago
3 hours ago