Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 மார்ச் 06 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட ரெட்பானா கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபரின் முறையற்ற நிருவாகத்தைக் கண்டித்தே மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்காது பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் வறிய குடும்பங்கள் வாழும் கிராமத்தில் உள்ள மாணவர்கள் தூர இடங்களுக்கு கல்வி கற்கச் செல்ல முடியாத காரணத்தினால் இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போதைய அதிபர் பாடசாலையில் வகுப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளாது வகுப்புக்களைக் குறைத்துக் கொண்டு வருவதாகவும், இதனால் வகுப்பேற்றப்படும் மாணவர்கள் அடுத்த வகுப்பு இல்லாத காரணத்தினாலும், தூர இடங்களுக்குச் செல்ல வசதி இல்லாத காரணத்தினாலும் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வேண்டி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பகிஷ்கரிப்பில் ஈடுபடுத்தியதாகவும் பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
2 hours ago