Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 மார்ச் 10 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
இன்று பகல் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் புத்தளம் விருதோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுண்டிக்குளம் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த இந்த இளைஞரும் மற்றொரு விருதோடையைச் சேர்ந்த இளைஞரும் இன்று பகல்
சுண்டிக்குளமிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி தமது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் இவர்கள் பயணித்த மோட்டார் பைசிகள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஹிலுருதீன் முஹம்மத் ஹலீம் எனும் இருபத்தி மூன்று வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த எம். ஏ. எம். றிபாஸ் என்ற இளைஞர் காயங்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழ்நதவரின் உடல் தற்சமயம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
moon Sunday, 11 March 2012 01:39 AM
இன்னலிள்ளஹி வைன்ன இலஹி ராஜ்வூன் .எல்லாம் வல்ல அல்லா இவருக்கு சுவர்க்கம் செல்ல துணை புரிவானாக ஆமீன் . எனது ஆழ்ந்த அனுதபாதினை உயரிலந்தரின் குடும்பத்தினருக்கு தெரிவிதுக்கொல்கின்றேன் .இந்நபர் என் நண்பன் ஆவர் .நானும் விருதொடையைச் சேர்ந்தவன் .
Reply : 0 0
Naleefa Sunday, 11 March 2012 03:57 AM
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். அதிர்ச்சியான தகவல். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
(தமிழ்நாடு வேலூரிலிருந்து விருதோடை நளீபா)
Reply : 0 0
AABIRAHAAM LINGANKANAMOOLAI Friday, 16 March 2012 07:41 AM
அவரின் குடும்பத்தார்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் (தமிழ் நாடு ராணி பேட்டையில் இருந்து கனமூலை ஆபிரஹாம் லிங்கன் )
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago
44 minute ago
3 hours ago