2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கஞ்சாவுடன் சென்ற இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 மார்ச் 22 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                             (எஸ்.எம்.மும்தாஜ்)

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சீருடையில்  மோட்டார் சைக்கிளில்  2 கிலோ கஞ்சாவைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக விசேட பிரிவினரால் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பஹரிய 15ம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த சாலியவெவ மற்றும் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுகின்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே கைதுசெய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்களை புத்தளம் தில்லையடிப் பிரதேசத்தில் சோதனைக்குட்படுத்தியபோது, 2 கிலோ கஞ்சாவுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இச்சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவரும் புத்தளம் பொலிஸார், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X