2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டில் அதிபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 30 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாடசாலை அதிபரொருவரை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாராவில நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று உத்தரவிட்டார்.  

புத்தளம், மாராவில பிரதேச பாடசாலையொன்றின் அதிபரொருவர் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 5  மாணவிளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

10 வயதுக்குட்பட்ட மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் மாரவில பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X