2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மீள திறக்கப்பட்ட வார்ட் தொகுதி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 30 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு கிராமிய வைத்தியசாலையின் முதலாவது வார்ட் தொகுதி நேற்று வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைத்தியசாலையின் வார்ட் தொகுதிக்கான கட்டிட வேலைகள் முடிவடைந்து 24 நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதிகளுடன் 2005ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டாலும் அவ்வார்ட் தொகுதி இயங்காமலிருந்தது. இந்த நிலையிலேயே இவ்வார்ட் தொகுதி நேற்றையதினம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி, மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • PUTTALAM MANITHAN Sunday, 08 April 2012 09:13 AM

    இந்த விளையாட்டை விட்டா உங்களுக்கு வேற விளையாட்டே இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X