2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய சீன பணியாளர் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கடமையாற்றி வந்த சீன பணியாளர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் மரணமடைந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஷான் ஸாஸ் றுய் என்ற பணியாளரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென்று மயக்கமடைந்த இந்நபர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சீன பணியாளர்களால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரமொன்றில் இவர் பங்குபற்றியிருந்ததாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னரும் இவரது உறவினர்களின் வருகையின் பின்னரும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் கூறினர். (அகோஸ்ரின் பெர்னாண்டோ)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X