2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதையல் மூலம் பெறப்பட்டதாகக் கூறி பொருட்களை விற்க முயன்ற மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                               (எஸ்.எம்.மும்தாஜ்)

புதையலிலிருந்து  பெறப்பட்டதாகக் கூறி விற்பனை செய்வதற்காக இருந்த ஒருதொகை செப்புக்காசுகள்,  42 செப்புக்கோளங்கள்  மற்றும் வெள்ளி வளையல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், 3 சந்தேக நபர்களையும் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது  புதையலிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஒருதொகை செப்புக்காசுகள், செப்புக்கோளங்கள் வெள்ளி வளையல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

நவகத்தேகம, கோன்கடவள பிரதேசத்திலுள்ள வீடொன்றில் புதையலிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பழமைவாய்ந்த  ஒருதொகை செப்புக்காசுகள், செப்புக்கோளங்கள் வெள்ளி வளையல்கள் உட்பட மேலும் பொருட்கள் விற்பனை செய்வதற்காக இருப்பதாகவும்  இவை பொலன்னறுவை பிரதேசத்தில் புதையலிலிருந்து பெறப்பட்டதாக இவற்றினை விற்பனை செய்யவிருந்தவர்கள் தெரிவிப்பதாகவும் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து புத்தளம் பொலிஸார் இப்பொருட்களை கொள்வனவு செய்வதைப் போன்று ஒருவரை அனுப்பி சுற்றிவளைப்பை மேற்கொண்டு இப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட இச்செப்புக்காசுகளுடன் தற்போது புழக்கத்திலுள்ள காசுகளும் காணப்பட்டதாகவும் புத்தளம் பொலிஸார் கூறினார்.

கைப்பற்றப்பட்ட ஒரு கிலோ  செப்புக்காசுகளை 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யவிருந்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X