2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி வீழ்ந்த கிணற்றை நிர்மாணிக்க உதவி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்)

சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று சிலாபம் அத்துவன பிரதேசத்தில் சிறுமியொருவர் தவறி வீழ்ந்த 70 அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றை பாதுகாப்பான கிணறாக நிர்மாணிப்பதற்கான உதவியை வழங்குவதற்கு வடமேல் மாகாண மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை, வீதி அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா முன்வந்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று 70 அடி ஆழமான பாதுகாப்பற் கிணற்றில் தவறி வீழ்ந்த 9 வயது சிறுமியை 11 வயதான  அவரது சகோதரன்  காப்பாற்றிய  துணிகரச் செயல் பற்றி கேள்விப்பட்ட நிலையிலேயே அவர் இவ் உதவியை வழங்க முன்வந்துள்ளார்.

மாகாண அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து இவ் உதவியை வழங்கிய நிலையில் கிணற்றை நிர்மாணிப்பதற்கான வேலைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. 

அத்துடன்,  இவர்களது வீட்டை நிர்மாணித்துக்கொள்வதற்கும் தனது அமைச்சின் ஊடாக சுமார் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கவும் அவர் இதன்போது அதிகாரிகளைப் பணித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X