2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வணாத்தவில்லு பிரதேச சபையை இடமாற்றுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 மே 04 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம். ஹிஜாஸ் , எஸ்.எம். மும்தாஜ், ஜெசீரா)

புத்தளம் மாவட்டத்திலுள்ள வணாத்தவில்லு பிரதேச சபை அலுவலகம், கரைத்தீவு பிரதேசத்திலிருந்து வணாத்தவில்லு பிரதேசத்துக்கு இடமாற்றப்படுவதாக கூறி கரைத்தீவில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று ஜூம்மா தொழுகையினையடுத்து மைதானத்தில் ஒன்றுக்கூடிய மக்கள் பிரதேச சபை காரியாலயம் மாற்றப்படுவதற்கு கோசமிட்டவாறு அங்கிருந்து பிரதேச சபை காரியாலயம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்;ந்து கரைத்தீவிலுள்ள பிரதேச சபையினை முற்றுகையிட்டு சபை வளாகத்தினுள் புகுந்து கோசங்களினை எழுப்பினர்.

இதன் போது காரியாலயத்தினுள்லிருந்து வெளியில் வந்த வணாத்தவில்லு பிரதேச சபைத்தலைவர் இந்திக சேனாதிர, அங்கு கூடியிருந்த மக்களிடம் தான் மேற்கொண்ட அபிவிருத்தி தொடர்பாக கூறிக்கொண்டிருந்த வேளை அவை எமக்கு தேவையில்லை என கோசமிட்ட மக்கள் வணாத்தவில்லு பிரதேச சபை வழமை போன்று இங்கு இயங்க வேண்டுமென கூறினர்.

இதனையடுத்து பிரதேச சபைத்தலைவர் வணாத்தவில்லு பிரதேச சபைபின் பிரதான காரயாலயத்தினை இவ்விடத்திலிருந்து மாற்றமாட்டேன் உறுதியளித்ததுடுன் கரைத்தீவு பகுதியில் எவருக்கும் சட்ட விரோதமாக மண் வெட்டவும், அரச காணிகளினை பிடித்து விற்கவோ இடமளிக்க மாட்டேன் என கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆர்ப்பாட்ட காரர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.





.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X