2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் வட மத்திய மாகாண சபையை கலைக்க தடை

Super User   / 2012 மே 08 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் வட மத்திய மாகாண சபையை கலைப்பதற்கான இடைக்கால தடை உத்தரவினை வட மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் அனில் ரத்னாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மணுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே, நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார்.

2013ஆம் ஆண்டு கலைக்க வேண்டிய வட மத்திய மாகாண சபையை முற்கூட்டி கலைக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சி சட்டவிரோதமானது என மாகாண சபை உறுப்பினர் அனில் ரத்னாயக்க மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மத்திய மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உட்பட ஐந்து பேரை பிரதிவாதிகளா கொண்ட இந்த மனுவின் அடுத்த விசாரணை எதிர்வரும் மே 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. (ரீ.பாரூக் தாஜுதீன், ஆகில் அஹமட்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X