2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் கிளைகளை புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 மே 12 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆகில் அஹமட்)


அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளைகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அநுராதபுரம் விமான நிலைய வீதியில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தை திறந்து வைத்ததினூடாக இப்  புனரமைப்பு நடவடிக்கைகையும் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது உரையாற்றிய அவர்,
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அநுராதபுரத்தில் வைத்தே கட்சியை ஆரம்பித்தார். இதனடிப்படையில் இன்றைய தலைவர் மஹிந்த ராஜபகஷவின் ஆலோசணைகளுக்கிணங்க கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகளும் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன.

இது 2012ஆம் ஆண்டுக்கான கடசியின் புனரமைப்பு நடவடிக்கை மட்டுமே. இதற்காக மிக விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறப்போகின்றது என எண்ணிவிடவேண்டாம் என அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X