2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பொலன்னறுவை சிவாலய மூலஸ்தான லிங்கம் அகற்றப்பட்டு புதையல் தோண்டப்பட்டுள்ளது

Menaka Mookandi   / 2012 மே 14 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலன்னறுவையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சிவன் கோயிலில் இனந்தெரியாதோர் சிலர் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேற்படி சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தை அவ்விடத்திலிருந்து அகற்றியே இந்த புதையல் தோண்டும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் மூன்றரை அடி ஆழமாக் தோண்டப்பட்டுள்ளதாகவும் இந்த புதையல் தோண்டும் முயற்சி எப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாதுள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர். (கே.ஜீ.கருணாரத்ன)






You May Also Like

  Comments - 0

  • Das Monday, 14 May 2012 03:20 PM

    இச்செய்தியை படங்களுடன் வெளியிட்டமைக்கு நன்றி. வரலாற்று ஆவணப் படுத்தல் பணிகளை செய்து வருகின்றீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X