2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 18 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி, ஏத்தாளை அரசினர் றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை நடத்தினர்.

பாடசாலையிலிருந்து ஏத்தாளை பிரதான சந்திவரை டெங்குநோய் தொடர்பான பதாதைகளினை தாங்கியவண்ணம்  ஊர்வலமாக வந்த இம்மாணவர்கள், டெங்குநோயை இல்லாதொழிப்போம் என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் டெங்குநோய் தொடர்பான வீதி நாடகமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்சன், பொதுசுகாதார அதிகாரிகள், பெற்றோர்களென பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X