2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமத்திய மாகாண சபையை கலைக்க வேண்டாம்: ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

Super User   / 2012 மே 19 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (கெலும் பண்டார)

வட மத்திய மாகாண சபையை கலைத்து தேர்தல் நடத்தும் திட்டத்தை கைவிடுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அம்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.

நெல்லுக்கான குறைந்தவிலை, வேலைவாய்ப்பின்மை, தொல்பொருள் பிரதேசங்கள் அழிக்கப்படுதல் போன்றவற்றினால் 'சாதகமற்ற கள நிலைமை' உள்ளதாக மேற்படி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க இக்கடிதத்தில் கையெழுத்திடவில்லை. தரமற்ற உர விநியோகம், பிராந்தியத்தின் பல பகுதிகளில் நீர்வழங்கல் வசதிகள் இன்மை முதலானவை வடமத்திய மாகாண சபையை 1998 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்துவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியின் செல்வாக்கை குறைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும்  வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளை கலைத்து செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை அரசியல் கட்சிகள் தமது செயற்பாடுகளை மீளமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. திடீர் தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிகள் குறித்து ஐ.தே.க. நேற்று கலந்துரையாடலொன்றை நடத்தியது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இக்கூட்டத்தில் மேற்படி 3 மாகாகாண சபைகளின் ஐ.தே.க. உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X