2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Kogilavani   / 2012 மே 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ், ஜூட் சமந்த)

சிலாபம் பங்கதெனிய, வெஹெரகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

பீ. ஜி. தொன் வில்லியம் அப்புஹாமி எனும் 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பங்கதெனிய தெதுரு ஓயா ஆற்றுக்கு அருகில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்திற்கு நீர்பாய்ச்சுவதற்காக சென்று நேற்று சனிக்கிழமை மதியம் வரை வீடு திரும்பாமல் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது இவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம்  பிரேதச பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X