2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆனமடு - சிலாபம் வீதி தனியார் பஸ் பணி பகிஷ்கரிப்பு

Menaka Mookandi   / 2012 மே 21 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)


வடமேல் மாகாண வீதிப் போக்குவரத்துச் சேவை அதிகார சபையினால் ஆனமடு - சிலாபம் வீதிக்கு புதிதாக இரண்டு பஸ் வண்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வீதியின் தனியார் பஸ் வண்டிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

ஆனமடு சிலாபம் வழியில் பயணத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகள் ஒன்றிணைப்பு அடிப்படையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு தனியார் பஸ் வண்டிகளுடன், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒரு பஸ் வண்டியும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வழியில் 12 தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புதிதாக மேலும் இரண்டு பஸ் வண்டிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து அதன் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுவதிலிருந்து விலகி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனமடு சிலாபம் வீதியில் சேருகெலே பிரதேசத்தில் தனியார் பஸ் வண்டி பணியாளர்கள் தனது பஸ் வண்டிகளை வீதியோரங்களில் நிறுத்தி வைத்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு அவ்விடத்திற்கு பள்ளம பொலிஸார் வருகை தந்து எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டாம் என அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X