2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மதவாச்சி பிரதேசத்தில் காபட் கலவை தயாரிக்கும் இயந்திர தொகுதி திறப்பு

Super User   / 2012 மே 21 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மதவாச்சி, பெரியகுளம் பிரதேசத்தில் 1,015 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட காபட் கலவை தயாரிக்கும் இயந்திர தொகுதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷpல் ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, திஸ்ஸ கரல்லியத்த, பிரதி அமைச்சர் டப்ளிவ்.பீ.ஏக்கநாயக்க உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

"வடக்கு, கிழக்கு மற்றும் அதனோடு இணைந்ததாக வட மத்தி ஆகிய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு தேவையான காபட் கலவைகளை இலகுவாகவும் குறைந்த செலவிலும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பெருமளவு நிதியை செலவாக்கி  காபட் கலவை தயாரிக்கும் இயந்திரத்தொகுதி இன்று திறந்து வைக்கப்படுகின்றது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது" என அமைச்சர் பஸில் ராஜபக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X