2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பில் கரையொதுங்கிய சடலம் தொடர்பாக கைதாகிய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Super User   / 2012 மே 29 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், புதுக்குடியிருப்பு  9ஆம் வட்டார கடற்கரையோரத்தில் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி கரையொதுங்கிய ஆண் சடலம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 8 மாணவர்கள் உட்பட 10 பேரை எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

மரணமான குறித்த நபர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கை நீதிமன்றிலும் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் கொண்ட புத்தளம் பொலிஸார்  8 மாணவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது 8 பேரையும் 10 நாட்களுக்கு விளக்கமறியளில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆதனைத் தொடர்ந்து இம்மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் பொலிஸார் இம்மரணத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  10 பேரையும் கடந்த 15ஆம் திகதி பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தய போது 8 மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த மாணவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவானிடம்  விடுத்த வேண்டுகொளை நிராகரித்த நீதவான், 28ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மீண்டும் இன்று 29ஆம் திகதி 8 மாணவர்கள் உட்பட 10 பேரும் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படத்தப்பட்டனர்.
இதன்போது மாணவர்கள் கல்வி கற்பதால் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதாக அவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறியதுடன், அவர்களுக்கு பிணை வழங்கும்படி இரண்டாவது தடவையாகவும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

எனினும் இன்றைய தினமும் அவர்களுக்கான பிணையை நீதிபதி நிராகரித்து எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .