2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளை உபயோகித்த இருவர் கைது

Menaka Mookandi   / 2012 மே 30 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)

சிலாபம் பிரதேச ஏரிகளில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரை மாராவில மாவட்ட கடற்றொழில் அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாராவலி கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸாருடன் இணைந்து கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வலைகளைப் பாவிப்பதால் ஏரிகளில் உள்ள சிறிய மீன் குஞ்சுகள் அவ்வலைகளுக்குள் அகப்பட்டு இறந்து விடுவதால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது என கடற்றொழில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X