2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பொஸனை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலையில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

பொஸன் உற்சவ காலத்தில் அனுமதியின்றியும் வீதிப் போக்குவரத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையிலும் அன்னதான நிகழ்வுகள் நடத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொஸன் கமிட்டி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இம்முறை அநுராதபுரம் மற்றும் மஹிந்தலை பகுதியில் அன்னதான நிகழ்வுகளை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகயில் 48 அன்னதான நிகழ்வுகளை நடாத்துவதற்கான பதிவுகள் செய்யப்பட்டுள்ளது என அநுராதபுரம் நகர சபையின் நகர ஆணையாளர் சம்பத் ரோஹன தெரிவித்தார்.

போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நடாத்தப்படும் அன்னதான நிகழ்வுகளை அவ்விடத்திலிருந்து அகற்ற நேரிடும் எனவும் இதற்காக பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் உதவிகளும் பெறப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X