2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொஸன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் பாடசாலைகளுக்கு ஒரு வார விடுமுறை

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

பொஸன் உற்சவத்திற்காக ஜுன் மாதம் முதலாந் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 16 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த 16 பாடசாலைகளுள் 3 தேசிய பாடசாலைகளும் 13 மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளும் அடங்குகின்றன.

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம், ஸவர்ணபாலி மகளிர் வித்தியாலயம், ஸாஹிரா மகா வித்தியாலயம், ஜோஸப் மகா வித்தியாலயம், கே.பீ.ரத்னாயக்கா மகா வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர ம.வித்தியாலயம், தேவநம்பிய திஸ்ஸபுர ம. வித்தியாலயம், பொத்தானகம வித்தியாலயம், நிவத்தக்கசேத்திய ம.வித்தியாலயம், மகா போதிய வித்தியாலயம், ரத்மலே திஸ்ஸ ம.வித்தியாலயம், மிஹிந்தலை வித்தியாலயம், மிஹிந்தலை கனிஷ்ட வித்தியாலயம், விலச்சிய கனிஷ்ட வித்தியாலயம், கம்பன்குளம் வித்தியாலயம், தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X