2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மயில்களிலிருந்து பரவும் வெள்ளை நிற உண்ணிகளால் ஹபராதுவ மக்களிடையே பீதி

Menaka Mookandi   / 2012 ஜூன் 06 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயில்களிலிருந்து பரவுவதாக நம்பப்படும் வெள்ளை நிற உண்ணிகளால் ஹபராதுவ, இமதுவ தேயிலைத் தோட்டத்தை அண்மித்த கிராமவாசிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

அரைக் கொத்தமல்லியின் அளவைக் கொண்டுள்ள இந்த உண்ணிகள், மயில்கள் பறக்கும் போது கிழே விழுந்து மனித உடல்களில் ஒட்டிக்கொள்வதாக தெரியவந்துள்ளது.

தோளில் உட்டிக்கொண்டுள்ள இவற்றி அகற்ற வேண்டுமாயின் உப்பு நீர் அல்லது சுண்ணாம்பு நீர் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் இதனையும் மீறி அவற்றை அகற்ற முற்பட்டால் காயங்கள் ஏற்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த உண்ணிகள் காரணமாக, அரிப்பு, வீக்கத்துடன் காய்ச்சல் ஏற்படுவதாகவும் இதனால் டைபஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X