2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'கிரிதலே நீர்த்தேக்கத்திலிருந்து சிறு போகத்திற்கான நீர் விநியோகம் நிறுத்தல்'

Super User   / 2012 ஜூன் 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பொலன்நறுவை, கிரிதலே நீர்த்தேக்கத்திலிருந்து சிறு போகத்திற்கான நீர் விநியோகம் இன்று திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் ஆர்.கே. மாரசிங்க தெரிவித்தார்.

"விவசாயிகளுடன் நடந்த கலந்தாலோசனையின் போது 50 சத வீதம் நெல்லும் 50 சத வீதம் மற்றைய தானியங்களும் விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் விவசாயிகள் 100 சத வீதம் நெல் விவசாயம் செய்திருப்பதனால் போதியளவு நீர்  இல்லை என" அவர் குறிப்பிட்டார்.

போதியளவு நீரை விநியோகம் செய்வதற்காக  மூன்று முறை நீர் தேக்கத்தை நிரப்ப வேண்டிவுள்ளது. எனினும் அதற்கான நீர் மகாவலி கங்கையில் இல்லை என அவர் தெரிவித்தார்.

இதனாலேயே நீர் விநியோகத்தை நிறுத்த தீரமானித்துள்ளதாக  நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .