2025 மே 24, சனிக்கிழமை

புனர்வாழ்வு பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், கற்பிட்டி, ஆனமடுவ பிரதேசங்களில் சிறுகுற்றங்கள் புரிந்து தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் நபர்களுக்கு, சுய தொழில் முயற்சிகளினூடாக அவர்களின் வருமானங்களினை அதிகரிப்பதற்காக வழிகாட்டல் கருத்தரங்கு இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்றது.

சிறைச்சாலை மற்றும் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சினதும், சிறு வியாபார அபிவிருத்தி அமைச்சினதும் புத்தளம் மாவட்ட காரியாலங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கில் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறு வியாபார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் சுதீர ஜெயரத்ன, புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ, புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எஸ்.சுமனசிறி உட்பட அமைச்சுக்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X