2025 மே 24, சனிக்கிழமை

உயர்தர பரீட்சைக்கு நான் இடையூறு ஏற்படுத்தவில்லை: பேர்ட்டி

Super User   / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தான் இடையூறு ஏற்படுத்தவில்லை என வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க கூறியுள்ளார்.

அப்படியான சம்பவம் நடைபெற்றதாக தான் அறியவில்லை எனவும் அவர் கூறினார்.

'நான் அந்த கூட்டத்திற்கு வந்தபோது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்தார். க.பொ.த. உயர்தரப் பரீட்சை பிற்பகல் 3.00 மணிக்கு முடிந்துவிட்டது. நான் அங்கு 3.15 மணிக்கு வந்தேன். அதற்கு முன்னர் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை' என அவர் கூறினார்.

"அப்பகுதியில் பரீட்சை நடைபெறுவதாக தான் அறிந்திருக்கவில்லை எனவும் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அது தனது எதிரிகளினாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கும்" எனவும் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X