2025 மே 23, வெள்ளிக்கிழமை

டெங்கு காய்ச்சலினால் இரண்டு குழந்தைகளின் தாய் மரணம்

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், நாகவில்லு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் டெங்கு காய்ச்சலினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார்.

மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட இவர் இரண்டு குழந்தைகளின் தாயான முஹம்மது கலீல் அன்பஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த மூன்று நாட்களாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவருக்கு சுமார் இரண்டு மாதங்களே ஆண் கைக்குழந்தையொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X