2025 மே 23, வெள்ளிக்கிழமை

மாணவியை குத்தி கொலை குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்

Super User   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்தில் 17 வயது மாணவி ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் எதிர்வரும்  17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர நீதவான் திருமதி ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டார்.

இப்லோகம இராணுவ முகாமைச் சேர்ந்த தமித் பிரியதர்சன என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டவராவார்.

சந்தேக நபர் நஞ்சருந்திய நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருக்கு சிறைப் பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார். (உபாலி ஆனந்த)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X