2025 மே 23, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவினால் மர வேலை திறன் பயிற்சி வழங்கல்

Super User   / 2012 செப்டெம்பர் 17 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் தொழில் திறன் பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஹொரவப்பத்தானை, கஹட்டஸ்ககெதிரிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 30 இளைஞர்களுக்கு மர வேலை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை சேர்ந்த தகுதிமிக்க பயிற்றுவிப்பாளர்களினால் இந்த ஆறு மாத பயிற்சி நெறி நடத்தப்பட்டது. பயிற்சி நெறி முடிவில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மாத்திரமே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சி நெறியினை நிறைவு 30 செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மரவேலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X